புதல்வரைப் பெறுதல்
PUTHALAVARAIPPERUTHAL
BEGETTING SONS
(61)
பெறுமவற்றுள் யாமறிவ
தில்லை அறிவறிந்த
மக்கட்பேறல்ல பிற
PERUMAVARRUL YAAMARIVADILLAI
ARIVARINDA
MAKKATPERALLA PIRA
Among all the gains,
there is nothing greater than the birth
of intelligent children.
(62)
எழுபிறப்பும் தீயவை
தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட்
பெறின்
EZHAPIRAPPUM THEEYAVAI THEENDAA PAZHIPIRANKAAP
PANPUDAIMAKKAT PERIN
If one begets children who have
blameless virtues,
inauspicious events will not ever touch,
for the next seven generations,
(63)
தம்பொருள் என்பதம்
மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான்
வரும்
TAMPORUL ENPADAM MAKKAL AVARPORUL
TANDAM VINAIYAAM VARUM
One’s own children, which are one’s sole
possession,
will be got only through one’s own
merits.
(64)
அமிழ்தினும் ஆற்ற
இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய
கூழ்
AMIZHDINUM AARRA INIDE THAM MAKKAL
SIRUKAI ALAAVIYA KOOZH
The gruel into which the tiny hand of
one’s child has dabbled,
is indeed tastier than nectar.
(65)
மக்கள்மெய் தீண்டல்
உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம்
செவிக்கு
MAKKAL MAIY TEENDAL UDARKINBAM MARRAVAR
SORKETTAL INBAM SEVIKKU
The touch of one’s children is a
pleasure for the body.
Their speech is a pleasure for the ear.
(66)
குழலினிது யாழினிதென்ப தம் மக்கள்
மழலைச்சொல் கேளா
தவர்
KUZHALINIDU YAAZHYINIDENABA TAMMAKKAL
MAZHALAICHOL KELAATHAVAR
Only those have not listened to the
prattle of their children,
will talk of the flute and the Veenaa as
melodious.
(67)
தந்தை மகற்காற்றும்
நன்றி அவையத்து
முந்தி இருப்பச்
செயல்
TANTHAI MAGARKAARRUM NANRI
AVAIYATTHU
MUNDI IRUPPA SEYAL
The best thing a father can do for his
son is,
to make him stand foremost in the
assembly of the learned.
(68)
தம்மின்தம் மக்கள்
அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம்
இனிது
THAMMINTAM MAKKAL ARIVUDAMAI MAANILATTU
MANNUYIRKELLAAM INIDU
If the intelligence of the children
excels one’s own,
that is the greatest joy for the humans
of this world.
(69)
ஈ.ன்ற பொழுதின் பெரிதுவக்கும்
தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட
தாய்
EENRA POZHADIN PERIDUVAKKUM THANMAGANAI
SAANRON ENAKKETTA THAAI
If a mother hears her son getting
praised as noble and learned,
she will feel more joy than what she
felt at his birth.
(70)
மகன் தந்தைக்
காற்றும் உதவி
இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும்
சொல்
MAGAN THANDAIKKARRUM UDAVI IVAN THANDAI
ENNORRAAN KOLLENUM CCHOL
‘What great penance this person do to
get a (noble) son like this’
Such a speech alone is the ‘grateful
act’ towards the father by the son.
No comments:
Post a Comment